கம்பிக்குடி கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவேன் அதிமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.ராஜசேகர் பேச்சு
திருச்சுழி தொகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவேன் அதிமுக கூட்டணி வேட்பாளர் எஸ். ராஜசேகர் பேச்சு.
விருதுநகர்,
திருச்சுழி தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வேட்பாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். திருச்சுழி தொகுதியில் அதிமுக வேட்பாளராக ராஜசேகர் போட்டியிடுகிறார். வேட் பாளர் ராஜசேகர் காரியா பட்டி, திருச்சுழி .நரிக்குடி ஒன்றியங்களில் உள்ள 100க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது வேட்பாளருக்கு கிராம. பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாகவரவேற்றனர். வேட்பாளர் ராஜசேகர் தோப்பூர், ஆத்திகுளம் சித்து மூன்றடைப்பு அல்லிகுளம் , கழுவனச் சேரி வக்கணாங்குண்டு கரியனேந்தல் கணக்கனேந்தல் உட்பட பல கிராமங்களில் வேட்பாளர் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருச்சுழி தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாக உள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜிஆர் முதல்வராக இருந்த போது திருச்சுழி தொகுதி வளர்ச்சிக்கு அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது . இதில் நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டமும் ஒன்று. கம்பிக்குடி நிலையூர் கால்வாய் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலம் காரியாபட்டி பகுதியான ஆவியூர்,அரசகுளம், மாங்குளம் ,கம்பிக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க பாடு படுவேன். ஏழை எளிய மக்களின் நலனுக்காக அதிமுக அரசு இருந்து வருகிறது. திருச்சுழி தொகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்படும் மேலும் கிராமங்கள் தோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் அதிமுக அரசு மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை தமிழக மக்கள் பெரிதும் பாராட்டி வருகின் றனர். மகளிருக்கு மாதம் தோறும் 1500 ரூபாய், வருடத் திற்கு 6 சிலிண்டர் போன்ற எண்ணற்ற திட்டங்கள் அறிவிக் கப்பட்டுள்ளது. நான் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 3 யூனியன் களிலும் சட்டமன்ற உறுபினர் அலுவலகம் அமைத்து மக்களின் குறைகள் உடனுக்குடன் நிறைவேற்ற பாடுபடுவேன். இவ்வாறு அதிமுக கூட்டணி வேட்பாளர் ராஜசேகர் பேசினார். காரியாபட்டி அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட கழக அவைத்தலைவர் ஜெய பெருமாள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆவியூர் ரமேஷ், ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆகியோர் குண்டுகுமார், பாஜகமாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் ஆறுமுகம் தோப்பூர் ரகுபதி, மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் வீரராசன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story