மூதாட்டி கொலை வழக்கில் வீட்டு வேலைக்காரருக்கு ஆயுள் தண்டனை செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு


மூதாட்டி கொலை வழக்கில் வீட்டு வேலைக்காரருக்கு ஆயுள் தண்டனை செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 April 2021 1:10 AM GMT (Updated: 1 April 2021 1:10 AM GMT)

மூதாட்டி கொலை வழக்கில் வீட்டு வேலைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு. 

சென்னை அண்ணா நகர் காந்தி ரோட்டை சேர்ந்தவர் யுவான் பெர்னாண்டர் (வயது 70). இவரது வீட்டில் சென்னை பல்லாவரம், கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த சிவகுமார் (41) வீட்டு வேலை செய்து வந்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதம்யுவான் பெர்னாண்டர் வீட்டில் சிவகுமார் ரூ. 2 ஆயிரத்து 70 திருடியதாக தெரிகிறது. இதை கையும் களவுமாக பிடித்த யுவன் பெர்னாண்டர் இது குறித்து சங்கர்நகர் போலீசில் புகார் செய்தார்.

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சிவகுமார், யுவான் பெர்னாண்டரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 30-6-2012 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவகுமார் நைலான் கயிற்றால் மூதாட்டி யுவான் பெர்ணான்டரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை

இது தொடர்பாக சங்கர் நகர் போலீசார் சிவகுமாரை கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வசந்த லீலா, சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் வக்கீல் சதீஷ்குமார் பாபு ஆஜரானார்.

Next Story