முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கீர்த்திகா முனியசாமி போட்டியிடுகிறார்
மக்களால் நான் மக்களுக்காகவே நான் என வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மாவின் ஆசி பெற்ற பெண் வேட்பாளர் நான் என முதுகுளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பேச்சு
ராமநாதபுரம்,
கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னந்தை ஜி ஆலங்குளம் சொக்கானை வடக்கு. தெற்கு பேய்குளம் வல்லகுளம் மறவாய்க் குடி கீழ செல்வன் ஊர் கிடாக்குளம் கடலாடி கரிசல்குளம் பூதங்குடி பாடுவநேந்தல் சாத்தங்குடி சீனி நாதபுரம் முத்துராமலிங்கபுரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பேசியதாவது மக்களால் நான் மக்களுக்காகவே நான் என வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மாவின் ஆசி பெற்ற பெண் வேட்பாளர் நான் ஆகையால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களுக்காக வாழ்ந்தவர் அம்மா அவர்கள் கூறிய வார்த்தையில் எனக்கு பின்னால் அ.தி.மு.க. கட்சி நூறாண்டுக்கு இருக்க வேண்டும் எனக் கூறியவர் எனவே நான்தன்னிறைவு தொகுதியாக மாற்றி அமைத்து இருப்பேன். இத்தொகுதியில் முதல் முறை தோல்வியை தழுவினாலும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறேன். இத்தொகுதியில் மக்களுக்கு சேவை செய்திட எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். நான் இத்தொகுதியில் வெற்றி பெற்றால் முதல் பிரச்சினையை குடிதண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். வேட்பாளருடன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி பாஜக மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமபாண்டி கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன். அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் முனியசாமி பாண்டியன் சாயல்குடி அந்தோணிராஜ் ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா ராஜேந்திரன் ஜெயச்சந்திரன் மகேஸ்வரி சக்திவேல் அ.தி.மு.க. நகர செயலாளர் முருகேசபாண்டியன் பாஜக மாநில பிரச்சார செயலாளர் நாகூர் பாண்டியன் பாஜக ஒன்றிய தலைவர் கோகுலகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் முனியசாமி ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ராமர் மாவட்ட இளைஞரணி அம்சராஜ் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் போஸ் கடலாடி ஊராட்சி மன்றத்தலைவர்கள் ராஜமாணிக்கம் லிங்கம் பாலகிருஷ்ணன் வீரபாண்டி நாராயணன் சுப்பிரமணியன் கன்னியம்பாள் சண்முகவேல் உட்பட அ.தி.மு.க.பாஜக தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story