அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மனதில் நிறுத்தி வாக்களிக்க வேண்டும் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு


அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மனதில் நிறுத்தி வாக்களிக்க வேண்டும் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 1 April 2021 8:49 AM IST (Updated: 1 April 2021 8:49 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சியின் மின்வெட்டை மறக்காமல் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மனதில் நிறுத்தி வாக்களிக்க வேண்டும் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு.

மதுரை,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று இரவில் திருப்பரங்குன்றம் பாம்பன் நகர், தென்பரங்குன்றம் பகுதியில் தீவிரப் பிரச்சாரம் செய்துமக்களிடையே வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல்ரமேஷ், கிழக்குபகுதி செயலாளர் பாலமுருகன், முன்னாள் கவுன்சிலர் சந்திரன் ஆகியோர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வுக்கு வெற்றியின் முகமாக “வேல்“வழங்கினர். 

இரட்டை இலை கோலமும் போட்டு உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர் இத்தகைய வரவேற்பில் ராஜன் செல்லப்பாஎம்.எல்.ஏ. மெய்சிலிர்த்துப்போனார். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்காளர்கள் மத்தியில் பேசும்போது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். 

தாலிக்கு தங்கம், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், விலையில்லா மிக்சி கிரைண்டர் மின்விசிறி, விலையில்லா மடிக்கணினி இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மக்களுக்காக செய்ததை மக்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே இதுபோன்ற நல்லதொரு திட்டங்கள் தொடர்ந்து கிடைத்திட தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்தால் மக்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன். 
அதற்காக புரட்சித் தலைவர் கண்டசின்னம், புரட்சித் தலைவியால் கட்டி காக்கப்பட்ட சின்னம் இரட்டை இலைக்குவாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story