மயிலாடுதுறை பகுதி மேலும் வளர்ச்சி அடைய பாடுபடுவேன் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் உறுதி
மயிலாடுதுறை பகுதி மேலும் வளர்ச்சி அடைய பாடுபடுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் உறுதி அளித்தார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை சட்டசபை தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் நேற்று மயிலாடுதுறை அருகே சித்தர்காடு, மூவலூர், மறையூர், மல்லியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தனக்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது வேட்பாளர் ராஜகுமாருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சித்தர்காட்டில் வேட்பாளர் ராஜகுமார் பேசியதாவது:-
மயிலாடுதுறையில் முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் மூலம் சாய் விளையாட்டு அரங்கம், நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குப்பை அள்ள டிராக்டர்கள் என இன்னும் எண்ணற்ற பணிகள் நடந்துள்ளன. இந்த பணிகள் நடைபெற நான் உறுதுணையாக இருந்தேன்.
நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் ஒரு கோடி மதிப்பீட்டில் மகப்பேறு பிரிவு கட்டிடம் உள்ளிட்ட பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். மயிலாடுதுறை பகுதி மேலும் வளர்ச்சி அடைய கை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். அப்போது வேட்பாளருடன் ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் இமயநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குமாரசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story