பழனி தொகுதி மக்களுக்காக குரல் கொடுக்கும் இளைஞர் இ.பெ.செந்தில்குமார் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பழனி தொகுதி மக்களுக்காக குரல் கொடுக்கும் இளைஞர் இ.பெ.செந்தில்குமார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
பழனி,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பழனி தொகுதி தி.மு.க வேட்பாளர் இ.பெ.செந்தில்குமாரை ஆதரித்து நேற்று பழனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த முறை பழனியில் நின்று வெற்றி பெற்ற இ.பெ.செந்தில்குமார், மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்த இளைஞர் ஆவார்.
அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்றுள்ளதால் தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றியை மக்கள் தேடித்தர வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பழனி பச்சையாறு அணை திட்டம், பழனி அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல் ஆகியவை தொடங்கப்படும் என்றார்.
இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. நேற்று பழனி- கொடைக்கானல் சாலையில் உள்ள புளியமரத்துசெட், வரதமாநதி அணைப்பகுதி, ஆலமரத்துக்களம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்களிடம் அவர் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகள் தமிழகத்தில் எந்தவித நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும் தங்களுக்கான நல்லாட்சி வரும் என்று நம்புகின்றனர். அந்த நம்பிக்கை வீணாகாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அனைத்து தரப்பினருக்கான ஆட்சியை அமைக்கும்.
தி.மு.க. கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கானதாக அமையும். அதன்படி பழனி தொகுதியில் போட்டியிடும் எனக்கு வாக்களித்தால் பழனி நகரின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். கொடைக்கானலில் கிடப்பில் உள்ள திட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்படும்.
பழனி பகுதியில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு இளைஞர்கள், பெண்கள், பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக பஸ் வசதி செய்து தரப்படும். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக இ.பெ.செந்தில்குமார் பிரசாரத்தின் போது பேசியதாவது:-
ஏழை, நடுத்தர மக்களின் நல்வாழ்விற்காக ஆட்சி செய்யும் ஒரே கட்சி தி.மு.க.தான். பழனி தொகுதியில் போட்டியிடும் எனக்கு வாக்களித்தால் பழனி நகரின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். பழனி-கொடைக்கானல் ரோப்கார் திட்டம் கொண்டுவரப்படும். அதேபோல் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்தும் தி.மு.க ஆட்சியில் முதன்மை திட்டமாக நிறைவேற்றி தரப்படும். பழனி பகுதியில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு இளைஞர்கள், பெண்கள், பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
Related Tags :
Next Story