வேதாரண்யம் தொகுதியில் நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க.வை ஆதரியுங்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பிரசாரம்


வேதாரண்யம் தொகுதியில் நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க.வை ஆதரியுங்கள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பிரசாரம்
x
தினத்தந்தி 1 April 2021 10:53 AM IST (Updated: 1 April 2021 10:53 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் தொகுதியில் நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க.வை ஆதரியுங்கள் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட வண்டல், குண்டுரான்வெளி, ஓரடியம்புலம், சின்னக்கடைத்தெரு, தலைஞாயிறு பஸ் நிலையம், திருமாளம், பிரிஞ்சு மூலை, பழையாற்றாங்கரை, சந்தானத்தெரு, லிங்கத்தடி, வேளாணிமுந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:- 

தலைஞாயிறு பகுதிக்கு பல கோடி ரூபாய் செலவில் பல நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரகுளத்தில் ரூ. 2 கோடியில் 4 கரைகளிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைஞாயிறு பேரூராட்சியில் அனைவருக்கும் விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. பழையாற்றங்கரையில் ரூ.3 கோடியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தலைஞாயிறில் பயணிகள் நிழலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வடுகூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.1¼ கோடியில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

தலைஞாயிறு ஒன்றியத்தில் துளசாபுரம், மகாராஜபுரம், சாக்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மாதந்தோறும்  குடும்பத் தலைவிக்கு ரூ. 1500  வங்கி கணக்கில் ஏற்றப்படும். ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும். சொந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு அரசு இடம் வாங்கி காங்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். ஆண்டுக்கு  6 விலையில்லா கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். குடும்பத்தலைவியின் கஷ்டங்களை போக்கும் வகையில்  அம்மா வாஷிங்மிஷின், விலையில்லா சூரியசக்தி சமையல் அடுப்பு வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக உயர்த்தப்படும். போலீசாருக்கு சுழற்சிமுறையில் வார விடுமுறை வழங்கப்படும். முதியோர் உதவி தொகை ரூ.2000- ஆக உயர்த்தி வழங்கப்படும். கால்நடை வாரியம் அமைக்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும். வேதாரண்யம் பகுதியில் இதுவரை சுமார் ரூ.2500 கோடியில் நலத்திட்ட பணிகள் நடைபெற்று உள்ளது. 

வெள்ளப்பள்ளத்தில் படகுகளை நிலைநிறுத்துவதற்கு துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரடியம்பலத்தில் மீன்வள பல்கலைக்கழகஉறுப்புக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அடப்பாறு, வெள்ளாறு, பாண்டவையாறு, வளவனாறு, அரிச்சந்திர ஆறு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. இதைப்போல பல்வேறு நலத்திட்டங்கள் வேதாரண்யம் தொகுதியில் தொடர எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது  பேரூர் செயலாளர் பிச்சையன், ஒன்றிய செயலாளர்கள் அவை.பாலசுப்பிரமணியன், தங்க சவுரிராஜன், மற்றும் கூட்டணி கட்சியினர் இருந்தனர்.

Next Story