கோவையில் ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா
கோவையில் ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.
கோவை,
சுகாதார துறை வெளியிட்டுள்ள பட்டியில் படி கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 58 ஆயிரத்து 960 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதையடுத்து கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்து உள்ளது.
கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 116 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதனை தொடர்ந்து தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 715 ஆக உயர்ந்து உள்ளது.
தற்போது 1,551 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுகாதார துறையினர் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 16 ஆயிரத்து 663 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி நேற்று வரை 1 லட்சத்து 95 ஆயிரத்து 305 பேருக்கு போடப்பட்டு உள்ளது. இனிவரும் நாட்களில் கோவையில் ஒரு நாளைக்கு 300 பேருக்கு மேல் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே பொதுமக்கள் அருகில் உள்ள அரசு மற்றும் நகர்நல மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story