தடுப்பு சுவரில் கார் மோதியது


தடுப்பு சுவரில் கார் மோதியது
x
தினத்தந்தி 1 April 2021 3:55 PM IST (Updated: 1 April 2021 3:55 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பு சுவரில் கார் மோதியது

கூடலூர்

ஊட்டியில் இருந்து நேற்று மதியம் 3 மணிக்கு கூடலூர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த கார் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரியை கடந்து செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. 
பின்னர் அந்த கார் அங்குள்ள மளிகை கடை முன்பு உள்ள நடைபாதை தடுப்புச்சுவரில் மோதி நின்றது.

 இதற்கிடையே அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறகாக ஓடியதை பார்த்த அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த விபத்தில் காருக்குள் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் காரின் முன்பக்கம் மட்டும் சேதம் அடைந்தது.

இதேபோல் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் மானந்தவாடிக்கு ஒரு கார் சென்றது. அந்த கார் கூடலூர் இரும்பு பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அந்த பாலத்தில் மோதியது. இதில் காருக்குள் இருந்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டனர். இது குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story