ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரிப்பு
ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.
ராதாபுரம்,
ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக இன்பதுரை போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கொளுத்தும் வெயிலிலும் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார். அ.தி. மு.க. வேட்பாளர் இன்பதுரை நேற்று சவுந்திரபாண்டியபுரம், கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், கட்டநேரி, துரைகுடியிருப்பு தெற்கு, துரைகுடியிருப்பு கிழக்கு, முத்து நாடார் குடியிருப்பு, மூலக்காடு, உறுமன்குளம், பெட்டைகுளம், பெருங்குளம், ஆயன்குளம், தலைவன்விளை, முதுமொத்தன்மொழி, ஆனைகுடி காலனி, ஆனைகுடி கஸ்பா, இடையன்குடி, இலக்கரிவிளை, உப்பசம்பாடு, யாதவர் காலனி, அருள் நகர், ரோச் மாநகர், காரம்பாடு, இடைச்சிதட்டுவிளை, காமராஜ் நகர், பூங்கா நகர், வாழைத்தோட்டம், குமாரபுரம், அந்தோணியார் புரம், மகாதேவன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தின்போது அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை கூறியதாவது:-
உலகமே திரும்பி பார்க்கும் வகையில், அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், குடும்ப பெண்களின் சுமையை குறைக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,500 மற்றும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், ஒவ்வொரு வீட்டிற்கும் வாஷிங்மெஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இதுவரையிலும் எந்த மாநிலத்திலும் அறிவித்திராத நலத்திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்திலேயே ராதாபுரம் தொகுதியில்தான் அதிக வளர்ச்சி திட்டப்பணிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக தடுப்பணைகள், நதிகள் இணைப்பு, வெள்ள நீர் கால்வாய் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளது. தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மிக சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.வள்ளியூர் நகர மக்களுக்கு அம்மா பூங்கா மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனியாக குடிநீர் இணைப்பு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கி சாதனை படைத்துள்ளது. இதுபோன்ற மேலும் எண்ணற்ற திட்டங்களை ராதாபுரம் தொகுதிக்கு கொண்டுவர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே. சீனிவாசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் நாராயண பெருமாள், ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் மைக்கேல் ராயப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, ஒன்றிய செயலாளர்கள் அந்தோணி அமலராஜா, கே.பி.கே.செல்வராஜ், நிர்வாகிகள் அருண் புனிதன், சமுகை சந்திரன், உவரி ரமேஷ், கதிரவன் ரோச், ரஸ்வின், கருப்பசாமி, சுடலைக்கண்ணு, சிவசுப்பிரமணியன், முடவன்குளம் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story