தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தினார்: மலையோர கிராமங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும் - விளவங்கோடு தொகுதி வேட்பாளர் சாமுவேல் ஜார்ஜ் வாக்குறுதி


தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தினார்: மலையோர கிராமங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும் - விளவங்கோடு தொகுதி வேட்பாளர் சாமுவேல் ஜார்ஜ் வாக்குறுதி
x
தினத்தந்தி 2 April 2021 12:00 AM IST (Updated: 1 April 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

விளவங்கோடு தொகுதியில் மலையோர கிராமங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என சுயேச்சை வேட்பாளர் சாமுவேல் ஜார்ஜ் பிரசாரம் செய்தார்.

களியக்காவிளை,

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக டாக்டர். சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார். நேற்று குழித்துறை பழைய பாலம் சந்திப்பில் இருந்து திறந்த வாகனத்தில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தலில் நான் வெற்றி பெற்றவுடன் மலையோர கிராமத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் தேவைப்படும் பகுதிகளுக்கு புதிய சாலைகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
முக்கியமான வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

தொடர்ந்து பழவார், பாலவிளை, மடிச்சல், படந்தாலுமூடு, களியக்காவிளை, மேக்கோடு, மலையடி, மருதன்கோடு, கழுவன்திட்டை, பாகோடு, ஞாறான்விளை போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக புதுக்கடையில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Next Story