கிணத்துகடவு தொகுதி மக்களின் 10 ஆண்டு கால குறைகள் தீர மு.க ஸ்டாலின் முதல்வராக வேண்டும் - தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பிரச்சாரம்


கிணத்துகடவு தொகுதி மக்களின் 10 ஆண்டு கால குறைகள் தீர மு.க ஸ்டாலின் முதல்வராக வேண்டும் - தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் பிரச்சாரம்
x
தினத்தந்தி 2 April 2021 12:00 AM IST (Updated: 1 April 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டம் கிணத்துகடவு தொகுதி தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் மதுக்கரை மார்கெட் அன்புநகர் என்.வி.எஸ் நகர், ராஜேஸ்வரி நகர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:-

தி.மு.க ஆட்சி அமைந்ததும் தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து அறிவிப்புகளையும் செயல்படுத்துவோம். கடந்த 10 வருடங்களாக இந்த தொகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இவை அனைத்திற்கும் மாற்றாக நமது ஆட்சி அமைந்ததும் அனைத்து வசதிகளும் மக்களின் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். மகிளிர்கான உரிமைத்தொகை சிலின்டர் மானியம் கர்பினிபெண்களுக்கான விடுப்பு ஆகியவை தலைவர் முதல்வராக பொறுப்பெற்ற உடனே நிறைவேற்றப்படும்.

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்படும் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். மாதம் ஒருமுறை மின்கட்டனம் செலுத்தும் முறை அமுல்படுத்தப்படும். கலைஞர் வீட்டுவசதி திட்டம் மூலம் தொகுதி முழுவதும் குடிசைகளே இல்லாத நிலை எற்படுத்தப்படும். கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனை களுக்கு பட்டா வழங்கப்படும் முதியோர் உதவி தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும். கலைஞர் உணவகம் அமைக்கபடும் போன்ற தலைவரின் எல்லா அறிவிப்புகளையும் கிணத்தகடவு தொகுதி மக்களுக்கு கிடைக்க வழி வகை செய்யப்படும்.

அனைத்து அடிப்படை வசதிகளும் பெற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் தலைவர் ஸ்டலின் முதல்வராக அமர வேண்டும். இந்த ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு நமது தலைவரின் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் அது வாக்காளர்காளகிய உங்களால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கிணத்துகடவு பகுதி லட்சுமிபுரத்தில் மாற்று கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் முன்னிலையில் தி.மு.க. வில் இணைந்தனர். பிரச்சாரத்தின்போது வேட்பாளருடன் தி.மு.க நகர செயலாளர் ராம்ஜி, ராஜேந்திரன் முன்னாள் பேருராட்சி தலைவர்கள் குமாரசாமி சாலம் பாஷா ஆகியோர் உடன் இருந்தனர். தி.மு.க வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் செல்லும் இடம் எல்லாம் பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Next Story