சிறுபான்மை மக்களுக்கு அ.தி.மு.க. அரசு என்றும் பாதுகாப்பு அரணாக விளங்கும் - திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. உறுதி
சிறுபான்மை மக்களுக்கு அ.தி.மு.க. அரசு என்றும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்று திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
திருப்பூர்,
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. நேற்று கொங்குநகர் பகுதிக்குட்பட்ட லட்சுமிநகர், ராம்நகர், ராமையா காலனி, குமார்நகர், அப்பாச்சிநகர், கொங்கு மெயின் ரோடு, ரங்கநாதபுரம், எஸ்.வி.காலனி, நெசவாளர் காலனி, காட்டன்மில் ரோடு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவ போதகர்களிடம் ஆதரவு கோரும் நிகழ்ச்சி தண்ணீர்பந்தலில் உள்ள ஐ.எப்.ஜி. சபையில் நடைபெற்றது. இதில் 15 வேலம்பாளையம், வாவிபாளையம், நெருப்பெரிச்சல், பூலுவப்பட்டி, தண்ணீர்பந்தல், அனுப்பர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 50 சபையின் போதகர்கள் கலந்து கொண்டு, கிறிஸ்தவ மக்களுக்கு கல்லறை தோட்டம், சபைகளுக்கு பாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அப்போது வேட்பாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
போதகர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். கிறிஸ்தவ மக்கள் எருசலேம் புனித பயணம் செல்வதற்கு மானியத்தை வழங்கியதும், அதை உயர்த்தி வழங்கியதும் அ.தி.மு.க. அரசுதான். தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு அ.தி.மு.க. அரசு என்றும் பாதுகாப்பு அரணாக விளங்கும். எனவே வரும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story