படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திட முதுகுளத்தூர் தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு - அ.தி.மு.க. வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பேச்சு


படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திட முதுகுளத்தூர் தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு - அ.தி.மு.க. வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பேச்சு
x
தினத்தந்தி 2 April 2021 12:00 AM IST (Updated: 1 April 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திட முதுகுளத்தூர் தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த செய்யப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பேசினார்.

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி வாக்குகளை கேட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கமுதி ஒன்றியத்திற்குட்பட்ட எருமைகுளம், பொட்ட புலி, கரிசல்புலி, அரியமங்கலம், இடிவிலகி, கோசுராமன், பொந்தம்புலி, பெருநாழி, மேலமாவிலங்கை, குமாரபுரம், டி.வி.எஸ்.புரம், குண்டுகுளம், சீமாநேந்தல் உட்பட 45 கிராமத்திற்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பேசுகையில், 

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க இத்தொகுதியில் பல்வேறு இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அரசு தேடி மக்கள் என்ற நிலை மாறி மக்களை தேடி வரும் அம்மாவின் அரச என்ற நிலை இன்றைக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது முதுகுளத்தூர் தொகுதியில் படித்த இளைஞர்கள்
பயன்பெறும் வகையில் ஐ.ஏ.எ.ஸ். ஐ.பி.எஸ் ஆகிவற்றை கற்பதற்கு இத்தொகுதியில் கோச்சிங் சென்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்வித்துறையில் 8 ஆண்டுகளில் 43 584 ஆசிரியர்கள் நியமனம். 248 புதிய ஆரம்ப பள்ளிகள் 117 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு 1027 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு. 604 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு என பல்வேறு திட்டங்களை அம்மாவின் அரசு செய்துள்ளது. 

இன்றைக்கு இந்தியாவிலேயே உயர் கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் உயர்ந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு காப்பதிலும் ஒருபக்கம் சமூக பாதுகாப்பு திட்டம் மறுபக்கம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஊக்கப்படுத்துவது என அனைத்து நிலைகளிலும் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.தாங்கள் சொல்வதையும் செய்வோம் மக்கள் நன்மை பயக்கும் எனில் சொல்லாததையும் செய்வோம் என்றார். இத்தொகுதியில் என்னை வெற்றி பெறச்
செய்தால் இத்தொகுதியில் கிராமங்கள் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முதல் பணியாக குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும் அடிப்படை வசதிகளான சாலை வசதி மின்சார வசதி படிப்பதற்கான நூலக வசதி போக்குவரத்து இல்லாத பகுதிகளை கண்டறிந்து போக்குவரத்து வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

இவருடன் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் முனியசாமி கமுதி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் காளிமுத்து ஒன்றிய அவைத்தலைவர் பம்மனேந்தல் சேகரன் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகேசன் பாஜக மாவட்ட பொருளாளர் கணபதி அ.தி.மு.க. நகர செயலாளர் சதீஷ் குமார் சடையனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா மலைச்சாமி அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் பசும்பொன் தமிழ்வாணன் ஒன்றிய இளைஞரணி செயலாளர் கருமலையான் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நிர்மல்குமார் மாவட்ட மின் பிரிவு தொழிலாளர் சங்க செயலாளர் ராஜேந்திரன் முருகேசன் பாஜக ஒன்றிய தலைவர் முருகன் பாஜக பொதுச்செயலாளர் பசும்பொன் ராமமூர்த்தி ஒன்றிய கவுன்சிலர்கள் கரிசல்குளம் மூர்த்தி புதுக்கோட்டை வீரபாண்டி ராமசாமிபட்டி பூபதி ராஜா சிங்கமுகன் உட்பட
அ.தி.மு.க.பாஜக தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம் பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Next Story