அம்மாவின் ஆட்சி அமைய மதுரை கிழக்கை மீட்போம் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் பிரசாரம்
அம்மாவின் ஆட்சி அமைய மதுரை கிழக்கை மீட்போம் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் பிரசாரத்தில் பேசினார்.
மதுரை கிழக்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கிழக்கு தொகுதி உட்பட்ட மந்திக்குளம், ஊமச்சிக்குளம், செட்டிக்குளம், வீரபாண்டி, செல்லாயிபுரம், அய்யர்புதூர், தவசிபுதூர், அய்யனர்புரம், பேச்சிகுளம், ராம்நகர், மேலப்பனங்காடி, கீழப்பனங்காடி, வாகைக்குளம், பாசிங்காபுரம், பெருமாள்பட்டி, பூதகுடி, லட்சுமிபுரம், மகாகணபதிபுரம், குலமங்கலம், காயாம்பட்டி, எழும்பூர் ஆகிய பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் அவரை பூ தூவியும், ஆரத்தி மற்றும் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
அப்போது ஆர்.கோபாலகிருஷ்ணன் பேசும் போது,
மக்களுக்கு சேவை செய்கின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். எனவே தான் அம்மா என்னை மதுரை நாடாளுமன்ற வேட்பாளராக தேர்வு செய்து மதுரை மக்களுக்கு சேவை செய்ய அனுப்பி வைத்தார். அதன் மூலம் நான் மதுரை மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். என்னுடைய சேவைகளை அறிந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட அனுமதித்தனர். நான் இங்கு வந்து பார்த்த போது கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதியில் எவ்வித திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. நான் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் திரண்டு வந்து புகார் தெரிவிக்கிறார்கள். எனவே எதிர்கட்சியினரிடமிருந்து மதுரை கீழக்கை மீட்போம் என்ற கொள்கையோடு இங்கு பிரசாரம் செய்ய வந்துள்ளேன்.
பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர் வாசு, திருநாவுக்கரசு, பொன்னம்பலம், முத்து கிருஷ்ணன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், முனியாண்டி, என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களும் உங்கள் வீடு தேடி வரும். மேலும் உங்கள் தொகுதிக்கு தேவையான பாதாள சாக்கடை, சாலை வசதி, குடிநீர் வசதி அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். எனவே இங்கு மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்கள் பாதம் பணிந்து வேண்டி கொள்கிறேன் என்றார்.
பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர் வாசு, மாணவரணி மாவட்ட செயலாளர் முத்து கிருஷ்ணன், ராமமூர்த்தி, திருப்பதி, அழகர்சாமி, ஐ.பி.எஸ்.பாலமுருகன், முனியாண்டி மற்றும் பா.ஜ.க.கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story