சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.19 லட்சத்து 67 ஆயிரம்


சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.19 லட்சத்து 67 ஆயிரம்
x
தினத்தந்தி 1 April 2021 11:28 PM IST (Updated: 1 April 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.19 லட்சத்து 67 ஆயிரம்

சோளிங்கர்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சோளிங்கரில் ஊர் கோவில் எனப்படும் பக்தோசித பெருமாள் கோவிலும், பெரிய மலையில் யோக நரசிம்மர் கோவிலும், சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளன. இந்த மூன்று கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பிரதான உண்டியல்களில் சில்லறை நாணயம், ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளி, வெளி நாட்டுப்பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். 

உண்டியல்களில் சேர்ந்த காணிக்கைகள் எண்ணும் பணி திருவள்ளூர் கோவில் உதவி ஆணையர் சுப்பிரமணியம், சோளிங்கர் கோவில் செயல் அலுவலர் ஜெயா ஆகியோர் முன்னிலையில் ேநற்று நடந்தது. அதில் பணமாக ரூ.19 லட்சத்து 67 ஆயிரத்து 544-ம், தங்கம் 66 கிராம், வெள்ளி 36 கிராம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story