சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் தீவிர பிரசாரம் - கை சின்னத்துக்கு வாக்கு கேட்டார்
சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் அசோகன் கடந்த சில நாட்களாக தொகுதியின் பல்வேறு பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட அம்மன்கோவில்பட்டி, மாரியம்மன் கோவில், பி.கே.எஸ்.ஆறுமுகம் நாடார் ரோடு உள்ளிட்ட பகுதியில் காங்கிரஸ், தி.மு..க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி சார்பில் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். ஏற்கனவே சிவகாசி நகராட்சி துணைத்தலைவராக பதவி வகித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் நகர்மன்ற துணைத்தலைவராக இருந்த போது சிவகாசி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி மக்களிடம் பாராட்டு பெற்றுள்ளேன். தற்போது அந்த சாதனையை சிவகாசி சட்டமன்ற தொகுதி முழுவதும் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதனால் நீங்கள் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். நான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட
பின்னர் இந்த பகுதிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது சிவகாசி நகர தி.மு.க. பொறுப்பாளர் காளிராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொழிலதிபர் அரசன் ஜீ.வி.கார்த்திக், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் குமரன், காளீஸ்வரன், தி.மு.க நகர வர்த்தக அணி தலைவர் இன்பம், சிவராஜ், முன்னாள் கவுன்சிலர் கணேசன் ஆகியோர் நகரின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசோகனுக்கு அதரவு திரட்டி வருகிறார்கள். இதே போல் காங்கிரஸ் கட்சியின் சிவகாசி நகர துணைத்தலைவர் முத்துமணி மற்றும் நிர்வாகிகள் நகரின் பல்வேறு பகுதியில் வீடு, வீடாக சென்று காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளை வழங்கி காங்கிரஸ் வேட்பாளர் அரசன் அசோகனுக்கு வாக்குசேகரித்தனர்.
மாநில மாணவர் அணி துணைத்தலைவர் சின்னதம்பி தலைமையில் திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட மேலரதவீதி, போலீஸ் காலனி, டீச்சர்ஸ் காலனி, முத்துமாரிநகர், பாண்டியன்நகர், எம்.ஜி.ஆர்.காலனி, கக்கன்காலனி, சத்யா நகர் ஆகிய பகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு அதரவு கேட்டார். அப்போது அவருடன் திருத்தங்கல் நகர் துணைத்தலைவர் செந்தில்வேல், அமைப்பு சாரா மாவட்ட தலைவர் மல்லீஸ்வரன், மாணவர் காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ், திருத்தங்கல் நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரன், மனோஜ்குமார், ஆனந்த், கார்மேகம் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிலையில் பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவர் சபையர் ஞானசேகரன் தலைமையில் திருத்தங்கல் மைக்கேல், சிவகாசி தெற்கு வட்டார தலைவர் பைபாஸ் வைரம், சிவகாசி நகர துணைத்தலைவர் முத்துமணி, முன்னாள் கவுன்சிலர்கள் காசி, ஆறுமுகச்சாமி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வீதி, வீதியாக கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.
Related Tags :
Next Story