மாவட்ட செய்திகள்

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது + "||" + Liquor dealer arrested under detention law

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம், 

திண்டிவனம் தாலுகா தீர்த்தகுளம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜா என்கிற மரூர் ராஜா (வயது 38). பிரபல சாராய வியாபாரியான இவர் திண்டிவனம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் ராஜாவை திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய குற்றச்செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ராஜாவை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து ராஜாவை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.