காரிமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் கைது
காரிமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் செட்டிகரை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தேவர் முக்குளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 26-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர் மற்றும் குடும்பத்தினர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது தேவர் முக்குலத்தை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவியுடன் தங்கி இருந்த அஜீத்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story