தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 6-ந் தேதி இரவு வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அதேபோன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 2.5.21 அன்றும் அனைத்து டாஸ்மாக் கடைகள் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், அனைத்து எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 (எப்.எல்.6) உரிமதலங்களில் அமைந்து உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story