முன்னாள் ராணுவத்தினர் தேர்தல் பணிக்கு அழைப்பு


முன்னாள் ராணுவத்தினர் தேர்தல் பணிக்கு அழைப்பு
x
தினத்தந்தி 1 April 2021 11:37 PM IST (Updated: 1 April 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் முன்னாள் ராணுவத்தினர் தேர்தல் பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் முன்னாள் படை வீரர்களையும், தேர்தல் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.  எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில, மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு தொழில் மையங்களில் பணிபுரியும் முன்னாள் படைவீரர்களை தேர்தல் பணிக்காக, அவர்களது பணியில் இருந்து விடுவிக்க சம்பந்தப்பட்ட அலுவலக தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

அதன்படி வருகிற 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையில் முன்னாள் படைவீரர்களை விடுவித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏதுவாக அடையாள அட்டையுடன் வருகிற 4-ந்தேதி அன்று காலை 9 மணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story