உள்துறை மந்திரிக்கு எதிர்ப்பு தெரிவித்த முகிலன் உள்பட 3 பேர் கைது
உள்துறை மந்திரிக்கு எதிர்ப்பு தெரிவித்த முகிலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக பா.ஜ.க. அரசு மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டும் பணியை தொடங்கி உள்ளது. இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்தாமல் பல்வேறு வகையான அனுமதிகளை வழங்கி துணை நிற்கிறது எனக்கூறி வேலாயுதம்பாளையத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வருகை புரிந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கரூர் மனோகரா கார்னர் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் கருப்புகொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முகிலன், மக்கள் அதிகாரம் சக்திவேல், ஆறுமுகம் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story