முத்துமாலை அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை


முத்துமாலை அம்மன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 2 April 2021 1:15 AM IST (Updated: 2 April 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலி்ல் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.

முக்கூடல்:

முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முக்கூடல் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட முத்துமாலை அம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கீதா கிருபாகரன், பொன்மயில், பெருமாள்சேட் ஆகியோர் திருவிளக்கு ஏற்றி வைத்தனர். விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் பெரி.குழைக்காதர், குமரி விபாக் செயலர் சுப்பையா, மாவட்ட தலைவர் அரி சுடலைமணி, இணைச் செயலாளர் முருகன், பொருளாளர் பூக்கடை கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  இதில் திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினார்கள்.

திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை ஹரிராம்சேட் நற்பணி மன்றம், நாடார் இளைஞர் அணி, காமராஜ் நற்பணி மன்றம், இந்து நாடார் சமுதாய ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story