வீட்டில் காய்ச்சப்பட்ட 15 லிட்டர் சாராயம் பறிமுதல்


வீட்டில் காய்ச்சப்பட்ட 15 லிட்டர் சாராயம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 April 2021 8:17 PM GMT (Updated: 1 April 2021 8:17 PM GMT)

தேர்தல் நேரத்தில் விற்பதற்காக வீட்டில் காய்ச்சப்பட்ட 15 லிட்டர் சாராயத்தை போலீசாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

செந்துறை:

அதிரடி சோதனை
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 35). இவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக அரியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், தனிப்படை போலீசாருடன் அதிகாலையில் சக்திவேல் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது, தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து அங்கிருந்த 15 லிட்டர் சாராயம், 4 பேரல்களில் இருந்த சாராய ஊறல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். சாராயம் காய்ச்சி விற்றதாக சக்திவேலையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய உறவினர் மணிகண்டனையும்(45) போலீசார் கைது செய்து அரியலூர் மாவட்டம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் 2 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், தேர்தல் நேரத்தில் விற்பனை செய்வதற்காக சாராயம் காய்ச்சியதாக தெரிவித்துள்ளனா்.
சிறையில் அடைப்பு
இது குறித்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தேர்தல் நேரத்தில் விற்பனைக்காக சாராயம் காய்ச்சிய சாராய வியாபாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story