தி.மு.க.- மாவீரன் மஞ்சள் படையினர் மோதல்; 2 பேர் கைது


தி.மு.க.- மாவீரன் மஞ்சள் படையினர் மோதல்; 2 பேர் கைது
x

வேட்பாளர் பிரசாரத்தின்போது தி.மு.க.- மாவீரன் மஞ்சள் படையினர் இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த முனியத்திரையான்பட்டி கிராமத்தில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் க.சொ.க.கண்ணன், தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த பாவேந்தன் (வயது 20), அவ்வழியாக கடைவீதிக்கு சென்றுள்ளார். இவர் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசனின் மாவீரன் மஞ்சள் படையை சேர்ந்தவர் ஆவார். பாவேந்தன் அந்த வழியாக செல்ல வழியில்லாததால், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க.வினரிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது ஆதரவாளர்களை திரட்டிய பாவேந்தன், தி.மு.க.வினரிடம் சென்று கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து தி.மு.க.வினர் அந்த பகுதியில் பிரசாரத்திற்கு செல்வதை தவிர்த்து, வேறு பகுதிக்கு சென்றனர்.இந்த மோதலில், மாவீரன் மஞ்சள் படையை சேர்ந்த மகாலிங்கம் உள்பட இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர்.இதுதொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில், மாவீரன் மஞ்சள் படையை சேர்ந்த பாவேந்தன், தி.மு.க. கூட்டணியை சேர்ந்த ராஜபாரதி (26)ஆகிய2பேரை உடையார்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story