ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.95ஆயிரம் பறிமுதல்


ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.95ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 April 2021 2:05 AM IST (Updated: 2 April 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.95ஆயிரம் பறிமுதல்

பல்லடம், 
 பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோதனை சாவடிகள், முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்து கொண்டு செல்லும் போது விசாரணை செய்து, பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி சோதனைச்சாவடியில் நேற்று பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் பல்லடம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதன் டிரைவர் நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார்(வயது29) என்பவரிடம், ரூ.95 ஆயிரம்  இருந்தது.இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பின்னர் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசனிடம் ஒப்படைத்தனர், அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.95 ஆயிரத்தை  அதிகாரிகள் அரசு கருவூலத்தில் செலுத்தினர். 

Next Story