திருப்பூர் அவினாசி ரோட்டில் ஒரே வழித்தடத்தில் சென்ற 2 பஸ்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக வாகனங்கள் மீது மோதும் வகையில் ஒன்றையொன்று முந்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் அவினாசி ரோட்டில் ஒரே வழித்தடத்தில் சென்ற 2 பஸ்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக வாகனங்கள் மீது மோதும் வகையில் ஒன்றையொன்று முந்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்
திருப்பூர் அவினாசி ரோட்டில் ஒரே வழித்தடத்தில் சென்ற 2 பஸ்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக வாகனங்கள் மீது மோதும் வகையில் ஒன்றையொன்று முந்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போட்டிபோட்டு சென்ற பஸ்கள்
திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக மைசூருவுக்கு நேற்று மதியம் 2.40 மணிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பஸ் ஒன்று புறப்பட்டது. இதேபோல் காங்கேயத்தில் இருந்து சத்தியமங்கலத்திற்கு தனியார் பஸ் ஒன்றும் மைசூருக்கு சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சத்தியமங்கலம் வரை ஒரே வழித்தடத்தில் செல்லக்கூடிய இந்த 2 பஸ்களும் அவினாசி ரோடு புஷ்பா சந்திப்பிற்கு ஒரே நேரத்தில் வந்தன. இதன் பின்னர் யார் முன்னால் செல்வது என்பதில் 2 பஸ்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதனால் அங்கு புறப்பட்ட நேரத்தில் இருந்து 2 பஸ்களும் ஒன்றையொன்று முந்தி செல்ல முயன்றன.
எஸ்.ஏ.பி. சந்திப்பு சிக்னலில் நின்ற தனியார் பஸ் டிரைவர் பின்னால் வந்த மைசூரு பஸ் முந்தி சென்று விடக்கூடாது என்பதற்காக ரோட்டில் சற்று குறுக்காக பஸ்சை நிறுத்தினார். பின்னால் வந்த மைசூரு பஸ்சும் தனியார் பஸ்சை பாதி முந்திய நிலையில் கொண்டு நிறுத்தினார். 2 பஸ்களும் ரோட்டில் தாறுமாறாக மற்ற வாகனங்களுக்கு இடையூறாக நிறுத்தியால் பொதுமக்கள் கோபமடைந்தனர். இதையடுத்து சிக்னல் விழுந்ததும் மீண்டும் 2 பஸ்களும் போட்டி போட்டு கொண்டு வேகமாக சென்றனர். முன்னால் சென்ற தனியார் பஸ் கடைசி வரை மைசூரு பஸ்சிற்கு வழி கொடுக்காமல் ரோட்டில் அங்கும் இங்குமாக ஓட்டி சென்றார்.
விசாரணை
அந்த 2 பஸ்களும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது மோதும் வகையில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் சென்றன. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சிலர் வேகமாக சென்று அம்மாபாளையம் போலீஸ் சோதனை சாவடியில் இருந்த போலீசார் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் 2 பஸ்களை ஓரமாக நிறுத்துமாறு கூறி டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஒருவொருக்கொருவர் தாக்க முயன்றனர். மைசூரு பஸ் டிரைவர் போலீசாரிடம், நாங்கள் மைசூருவுக்கு செல்வதால் இடையில் நிறுத்தி பயணிகளை ஏற்ற மாட்டோம். ஆனால் தனியார் பஸ் தொடக்கத்தில் இருந்தே குறுக்கு நெடுக்குமாக ஓட்டி எங்கள் பஸ்சிற்கு வழி விடாமல் தடுத்தார் என்று கூறினார்.
போலீசார் பேசிக் கொண்டிருக்கும் போதே தனியார் பஸ் டிரைவர் அங்கிருந்து பஸ்சை எடுத்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மைசூரு பஸ் டிரைவர் நாங்கள் புகார் தெரிவித்து கொண்டிருக்கும் போதே தனியார் பஸ் புறப்பட்டு செல்வதாக கூறி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் பின்னர் போலீசார் அவரை சமரசப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக 2 பஸ்களிலும் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story