குமரி கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
பெரிய வியாழனையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு பாதம் கழுவினார்.
நாகர்கோவில்:
பெரிய வியாழனையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு பாதம் கழுவினார்.
பெரிய வியாழன்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்ததை, ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு சாம்பல் புதன் அன்று தொடங்கி 41 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.
தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரம் ஆகும். இதில் பெரிய வியாழன் அடங்கும். பெரிய வியாழன் என்பது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு தனது சீடர்களுடன் அமர்ந்து இரவு உணவு உட்கொண்டார். முன்னதாக தனது சீடர்களின் பாதங்களை கழுவினார் இயேசு. இத்தகைய நிகழ்வை நினைவு கூறும் வகையில் பெரிய வியாழன் என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படுகிறது.
பாதம் கழுவும் நிகழ்ச்சி
அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நேற்று மாலை 6.30 மணிக்கு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி சிறுவர்கள், இளைஞர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் என மொத்தம் 12 பேருக்கு பாதங்களை கழுவினார். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஜெபம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், மறைமாவட்ட செயலாளர் இமானுவேல், மறைவட்ட பணியாளர் மைக்கில் ஏஞ்சலூஸ், பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது.
Related Tags :
Next Story