திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்


திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்
x
தினத்தந்தி 2 April 2021 2:43 AM IST (Updated: 2 April 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணியை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
சின்னம் பொருத்தும் பணி
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், அவினாசி, பல்லடம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், விவிபேட் ஆகிய எந்திரங்கள் தயார் செய்யும் பணி முடிந்துள்ளது. மேலும் வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பொருத்தும் பணி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்றது.
கலெக்டர் ஆய்வு
அவினாசி தொகுதிக்கு மகாராஜா பொறியியல் கல்லூரியிலும், தாராபுரம் தொகுதிக்கு அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்திலும், உடுமலை தொகுதிக்கு உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், மடத்துக்குளம் தொகுதிக்கு மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பல்லடம் தொகுதிக்கு பி.எம்.ஆர். திருமண மகாலிலும், திருப்பூர் வடக்கு தொகுதிக்கு திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியிலும், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு குமரன் மகளிர் கல்லூரியிலும், காங்கேயம் தொகுதிக்கு காங்கேயம் பி.எஸ்.ஜி.பொன்னம்மாள் திருமண மண்டபத்திலும் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, குமரன் மகளிர் கல்லூரி, காங்கேயம் பி.எஸ்.ஜி. பொன்னம்மாள் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணியை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். மிகுந்த கவனத்துடன் சரியான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், உதவி ஆணையாளர் (கலால்) ரங்கராஜன் மற்றும் தாசில்தார் ஜெகநாதன் (திருப்பூர் வடக்கு), சிவகாமி (காங்கேயம்) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story