வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது


வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது
x
தினத்தந்தி 2 April 2021 2:57 AM IST (Updated: 2 April 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

திருச்சி
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராஜாமணி தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 35). இவர் நேற்று முன்தினம் பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி பகுதியில் உள்ள டிபன் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேல்கண்டார் கோட்டையை சேர்ந்த பிரபல ரவுடி இளவரசன் (29) என்பவர், கத்தியை காட்டி மிரட்டி சத்யராஜ் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.400 பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தார். கைதான இளவரசன் மீது பொன்மலை போலீஸ் நிலையத்தில் 7 வழக்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான ரவுடி இளவரசனிடம் இருந்து ஒரு கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story