திருவெறும்பூர் தொகுதி கிளியூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ப.குமார் தீவிர வாக்கு சேகரிப்பு


திருவெறும்பூர் தொகுதி கிளியூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ப.குமார் தீவிர வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 2 April 2021 9:34 AM IST (Updated: 2 April 2021 9:34 AM IST)
t-max-icont-min-icon

கிளியூர் ஆதிதிராவிட மக்களுக்கு மயான பாதை வசதி செய்து தருவேன் என்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் வாக்குறுதி அளித்தார்.

திருச்சி, 

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப. குமார் போட்டியிடுகிறார். ப.குமார் நேற்று பத்தாளப்பேட்டை, கிளியூர் நடராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித் தார். கிளியூரில் குமாருக்கு பெண்கள் ஆரத்தி எடுத் தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என உறுதி யளித் தனர். அவர்கள் மத்தியில் ப.குமார் பேசியதாவது :-

தி.மு.க. ஆட்சி நடை பெற்ற 2006 முதல் 11 வரை இந்த பகுதி மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தார் கள். மின்வெட்டு பெரிய பிரச் சினையாக இருந்தது. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட் டன. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மின்தடை இருந்த தால் கிராமங்கள் இருண்டு கிடந்தன. 2016-ல் ஜெய லலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு அமைந் ததும் மின் வெட்டு ஆறே மாதங்களில் சரி செய்யப் பட்டு தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறியது. 

இப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் நமது ஆட்சியில் மக்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பகுதி  மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான  புது ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை எடப் பாடி பழனிசாமி அவர்கள் நெடுஞ்சாலை துறை அமைச் சராக இருந்தபோது நான் அவரது பார்வைக்கு கொண்டு சென்றேன். அதை உடனடியாக ஏற்று பாலம் கட்டி கொடுத்தார்கள். கிளியூர்  ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு மயான பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள் .அதனை நிறை வேற்றி தருகிறேன் என உறுதி அளிக்கிறேன். மேலும் இங்கு உள்ள வாய்க்காலில் பெண்கள் குளிப்பதற்கு படித்துறை வசதி செய்து தரவேண்டும் என்றும்  மாடுகளை வாய்க்காலில் இறக்கி  குளிப்பாட்டுவதற்கு வசதி செய்து தரவேண்டும் எனவும் கேட்டார்கள் அதனை செய்து தருவேன். 

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் குடும்ப அட்டை உள்ள பெண்கள் அனைவருக்கும் தலா ரூ. 1500 உதவித்தொகை வழங்க ப்படும். ரேஷன் பொருட் கள் உங்கள் இல்லம் தேடி வரும். அப்படி ஒரு நல்ல ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக் களித்து என்னை வெற்றி பெறச்  செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். வேட்பாளர் குமாருடன் ஒன்றிய செயலாளர் ராவணன்,சிந்தாமணி கூட்டுறவு அங்காடி தலைவர் சகாதேவ பாண்டி உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் சென்று இருந்தனர்.

Next Story