தளி அருகே பழிக்குப்பழியாக நடந்த பயங்கரம்: வாலிபர் தலையில் கல்லை போட்டு படுகொலை 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
தளி அருகே பழிக்குப்பழியாக வாலிபர் தலையில் கல்லை போட்டு படு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே பழிக்குப்பழியாக வாலிபர் தலையில் கல்லை போட்டு படு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர்
கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே உள்ள ஆதிகொண்டஹள்ளியை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன் (வயது 30). இவர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்த உளிபண்டா பகுதியை சேர்ந்த தனது தாய்மாமா ஓபேகவுடு என்பவரை சொத்து தகராறு காரணமாக கொலை செய்தார்.
இதனால் ஓபேகவுடாவின் மகன் முருகேஷ் (22) ஆத்திரத்தில் இருந்தார். இதன் காரணமாக உளிபெண்டா கிராமத்திற்கு வருவதை சென்னகிருஷ்ணன் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு தேர்தல் பிரசாரத்துக்காக உளிபெண்டா கிராமத்திற்கு சென்னகிருஷ்ணன் சென்றார்.
கொலை
இதை அறிந்த முருகேஷ் தனது தந்தையை கொலை செய்த சென்னகிருஷ்ணனை கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதற்காக தனது சித்தப்பா பாப்பையா (48) உதவியுடன் டிராக்டரை எடுத்து வந்து ரோட்டில் நடந்து சென்ற சென்னகிருஷ்ணன் மீது மோதினார். இதில் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சென்னகிருஷ்ணன் தலை மீது முருகேஷ் கல்லை போட்டு கொலை செய்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் தளி போலீசார் விரைந்து வந்து சென்னகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய முருகேஷ் மற்றும் பாப்பையா ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் தளி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story