வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பப்படும் பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி


வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பப்படும் பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி
x
தினத்தந்தி 2 April 2021 10:38 PM IST (Updated: 2 April 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பப்படும் பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி நடந்தது.

காரைக்குடி,

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பப்படும் பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி நடந்தது.

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகள் உள்ளது. தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்கு பதிவில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள், வாக்கு பதிவு மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அந்தந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று நிறைவு பெற்றது. இந்நிலையில் தற்போது தொகுதிகள் வாரியாக வீடுகளுக்கு நேரடியாக தேர்தல் அலுவலர்கள் வழங்கும் பூத் சிலிப்புகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி

இந்நிலையில் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் காரைக்குடி தொகுதிக்குட்பட்ட வாக்கு பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் பூத்சிலிப்புகள், சீல் வைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், சானி டைசர், ரப்பர் ஸ்டாம்புகள், விரலில் வைக்கப்படும் மை உள்ளிட்ட பொருட்களை வாக்கு பதிவு மையத்திற்கு அனுப்புவதற்காக பிரித்தெடுக்கும் பணியில் வருவாய்த்துறையினர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர். இந்த பணி காரைக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் தலைமையில் நடந்தது.
இதுகுறித்து கோட்டாட்சியர் சுரேந்திரன் கூறியதாவது-
ஒப்படைக்கப்படும்
ஏற்கனவே காரைக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிவடைந்து தயாராக உள்ளது. நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மாலையில் அந்தந்த வாக்கு பதிவு மையத்திற்கு இந்த மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட உள்ளது.
 மேலும் நாளை மறுநாள் காலையில் மாவட்டம் முழுவதும் இருந்து தேர்தல் வேலை பார்க்க வரும் அலுவலர்களுக்கு எந்தந்த பகுதியில் பணியாற்ற உள்ளார்கள் என்ற விவரத்தை கொடுத்து அந்த பகுதிக்கு அனுப்பும் பணியும் நடைபெறும். இதுதவிர வாக்கு பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் தேவையான பொருட்கள் மற்றும் விரலில் வைக்க பயன்படுத்தப்படும் மை உள்ளிட்ட பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்ற பின்னர் அந்தந்த பகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story