காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்
வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
வால்பாறை,
வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா எஸ்டேட் மேல் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி ரசாக்குமார் (வயது40). இவர் வால்பாறைக்கு வந்து விட்டு மீண்டும் சிறுகுன்றா எஸ்டேட் மேல் பிரிவு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேயிலை தோட்ட பகுதி வழியாக ஒரு காட்டெருமை வந்துள்ளது. ஸ்கூட்டியில் முட்டி மோதியுள்ளது.இதில் தூக்கி வீசப்பட்ட ரசாக்குமாருக்கு தலையில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரோட்டில் விழுந்த ரசாக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story