லாரியில் கொண்டு சென்ற 2,380 குக்கர் பறிமுதல்


லாரியில் கொண்டு சென்ற 2,380 குக்கர் பறிமுதல்
x
தினத்தந்தி 2 April 2021 11:24 PM IST (Updated: 2 April 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே லாரியில் கொண்டு சென்ற 2,380 குக்கர் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலம், 

திண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரகதீஸ்வரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து வந்த லாரியில் 2,380 குக்கர் இருந்தது. விசாரணையில், லாரியை ஈரோட்டை சேர்ந்த வெங்கடாசலம் மகன் விஜயகுமார் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தது தெரியவந்தது. ஆனால் அதனை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து 2,380 குக்கரை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

Next Story