வேளாண் மாணவிகள் பயிற்சி


வேளாண் மாணவிகள் பயிற்சி
x
தினத்தந்தி 2 April 2021 11:48 PM IST (Updated: 2 April 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே தென்னை விவசாயம் குறித்து வேளாண் மாணவிகள் பயிற்சி பெற்றனர்.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கீழவண்ணாரிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆண்டி என்பவரது தென்னந்தோப்புக்கு வேளாண் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் வந்தனர். அவர்கள் தென்னை மரங்களில் வரக்கூடிய காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் செயல்விளக்க பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்கினர். அதோடு தென்னை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயியின் அனுபவங்களையும் கேட்டறிந்தனர். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story