போலீசார், துணை ராணுவத்தினர் ஊர்வலம்


போலீசார், துணை ராணுவத்தினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 3 April 2021 12:06 AM IST (Updated: 3 April 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர், காரைக்குடி பகுதியில் போலீசார், துணை ராணுவத்தினர் ஊர்வலம் சென்றனர்.

எஸ்.புதூர்,

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக எஸ்.புதூர் ஒன்றியத்தில் வாராப்பூர், எஸ்.புதூர், கட்டுகுடிபட்டி, மின்னமலைப்பட்டி ஆகிய கிராமங்களில் சிவகங்கை மாவட்ட போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.ரகு தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி 100 சதவீத வாக்குகளை பதிவு செய்யவும், சட்டம், ஒழுங்கு மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் கூறினார். இதில் உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி, சிவகங்கை மாவட்ட போலீசார் மற்றும் மத்திய துணை ராணுவ படையினர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்லை முன்னிட்டு காரைக்குடியில் துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.


Next Story