வாக்களிக்கும் வைபோகம் அழைப்பிதழ்
சமூக வலைதளங்களில் வாக்களிக்கும் வைபோகம் என்று வாக்களிக்க வலியுறுத்தி அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம்,
சமூக வலைதளங்களில் வாக்களிக்கும் வைபோகம் என்று வாக்களிக்க வலியுறுத்தி அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.
நடவடிக்கை
தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள அனை வரையும் குறிப்பாக இளம் வாக்காளர்களையும், முதியவர் களையும், மாற்றுத்திறனாளிகளையும் வாக்களிக்க வைப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நாளன்று அனைவரும் வாக்களிக்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை மற்றும் தபால் வாக்குகள் என பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
இதுதவிர பொதுமக்களிடம் வாக்களிப்பதற்கான அவசியம் குறித்து விளக்கி கூறி விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள் என பலதரப்பட்ட முயற்சிகளை தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்டங்களிலும் மக்களிடம் சென்றடைய செய்து வருகிறது.
அழைப்பிதழ்
இதன்படி தற்போது புதிய முயற்சியாக அனைவரையும் வாக்களிக்க வாருங்கள் என்று விழா அழைப்பிதழ் தயாரித்து அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. ஜனநாயகத்தின் வலிமையை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது என்ற பொருளை அடிப்படையாக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் நிகழ்ச்சி ஏப்ரல் 6-ந் தேதி என்று அறிவித்து வாக்களிக்க அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வரவேற்பு
தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் இந்த வாக்களிக்கும் வைபோகம் நடைபெறுவதால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தாங்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளஅனைவரும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிந்து வந்து தவறாமல் தங்களின் வாக்கினை காலை 7மணி முதல் மாலை 5 மணிக்குள் பதிவு செய்து ஜனநாயகத்தின் வலிமையை காப்போம் என்று அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமண பத்திரிக்கை போன்று வாக்களிக்க வாருங்கள் என்பதை வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த பத்திரிக்கை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வாட்ஸ்சப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த பத்திரிக்கை வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story