பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான 80 வாக்குச்சாவடிகள்
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான 80 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்லடம்
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பதற்றமான 80 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
80 பதற்றமான வாக்குச்சாவடிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6 -ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 80 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 548 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடி, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது. மேலும் பதற்றமான குக்கிராமங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இதன்படி பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.வடுகபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி, கே.அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பணிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காளிவேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ராசாகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அறிவொளி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் நகராட்சி தொடக்கப்பள்ளி, வெங்கட்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, முத்தனம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நல்லகாளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காட்டூர்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 21 இடங்களில் உள்ள 80 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு கேமரா
அந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளது. மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story