படகு சவாரிக்கு குவியும் பயணிகள்


படகு சவாரிக்கு குவியும் பயணிகள்
x
தினத்தந்தி 3 April 2021 12:36 AM IST (Updated: 3 April 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் படகு சவாரிக்கு பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தொண்டி, 
தொண்டி அருகே உள்ள காரங்காடு சூழல் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. காரங் காடு கிராமத்தில் இயற்கை தந்த அருட்கொடையாக அமைந்துள்ள சதுப்பு நிலக்காடுகளை சுற்றி பார்ப்பதற்கும், இங்கு பல நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் வரும் பறவைகளை காணவும் அதன் அழகை ரசிக்கவும் தினமும் சுற்றுலா பயணிகள் அதிகஅளவில் வருகின்றனர். இதனால் வனத்துறை கிராம மக்களுடன் இணைந்து இங்கு சூழல் சுற்றுலா மேம் பாட்டு மையம் செயல்படுத்தி வருகிறது. மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர வனத்துறை சூழல் சுற்றுலா மேம்பாட்டு மையம் மூலம் படகு சவாரி நடைபெற்று வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து செல்கின்றனர்.

Next Story