தேர்தலை வெளிப்படையாக நடத்த உரிய நடவடிக்கை புதிய போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


தேர்தலை வெளிப்படையாக நடத்த உரிய நடவடிக்கை புதிய போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 3 April 2021 12:36 AM IST (Updated: 3 April 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் வெளிப்படை யாகவும், பாதுகாப்பாகவும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

கோவை,

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த அருளரசு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

அப்போது அவர் கூறும்போது,சட்டசபை தேர்தலை வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதுடன், தேர்தலில் மக்கள் பயமின்றி ஓட்டுப்போட உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார். 

கோவையில் படித்தவர்

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ள எஸ்.செல்வநாகரத்தினம் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.ஏ. ஏரோநாடிக்ஸ் முடித்துள்ளார். 

கடந்த 2009-2010-ம் ஆண்டில் எழுதிய முதல்முறையிலேயே ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று மணிப்பூர் மாநிலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தார்.

 அதன்பின்னர் 2014-ம் ஆண்டு மீண்டும் ஐ.பி.எஸ். தேர்வு எழுதி தமிழகத்திலேயே பணிபுரியும் வகையில் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும், தொடர்ந்து தூத்துக்குடி, சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனர், ராமநாதபுரம் கடற்பாதுகாப்பு பிரிவு, நாகப்பட்டினம் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 


Next Story