தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 2,897 பேர் தபால் வாக்கு பதிவு செய்தனர்- மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில் ராஜ் ஆய்வு


தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 2,897 பேர் தபால் வாக்கு பதிவு செய்தனர்- மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில் ராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 3 April 2021 12:41 AM IST (Updated: 3 April 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 2,897 பேர் தபால் வாக்கு பதிவு செய்தனர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி, ஏப்:
தூத்துக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 2 ஆயிரத்து 897 பேர் தபால் வாக்கு பதிவு செய்தனர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.

தபால் ஓட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் தபால் வாக்கு பதிவு செய்தற்கான சிறப்பு முகாம் காமராஜ் கல்லூரியில் நேற்று நடந்தது. இதனால் நேற்று காலை முதல் போலீசார் ஆர்வமுடன் வந்து தபால் வாக்குகளை பெற்று வாக்களித்தனர்.
இந்த தபால் வாக்குப்பதிவை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு ஆகியோர் உடன் இருந்தனர்.

பாதுகாப்பு பணி

பின்னர் அவர் கூறும் போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று பாதுகாப்பு பணியில் போலீசார் 2 ஆயிரத்து 130 பேர், தீயணைப்புத்துறையினர் 31 பேர், ஊர்க்காவல் படையினர் 298 பேர், முன்னாள் படைவீரர்கள் 208 பேர், முன்னாள் போலீசார் 82 பேர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 148 பேர் ஈடுபட உள்ளனர்.
இவர்கள் தபால் வாக்கு பதிவு செய்வதற்்காக ஏற்கனவே கடந்த 26-ந் தேதி முகாம் நடந்தது. அதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் தபால் வாக்கு பதிவு செய்தனர். தபால் வாக்கு செலுத்தாதவர்கள் வாக்கு செலுத்தும் வகையில் 2-வது கட்டமாக முகாம் நடக்கிறது. தபால் வாக்கு செலுத்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தபால் வாக்குகள் முறையாக பதிவுசெய்யப்பட்டு வாக்கு செலுத்தப்பட்டு உறையில் வைக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் என பெட்டியில் போடப்படுகிறது” என்றார்.

Next Story