புள்ளான்விடுதிக்கு பஸ் இயக்க கோரிக்கை


புள்ளான்விடுதிக்கு பஸ் இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 3 April 2021 12:51 AM IST (Updated: 3 April 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

புள்ளான்விடுதிக்கு பஸ் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகாடு, ஏப்.3-
ஆலங்குடி பணிமனையில் இருந்து தடம் எண் 21 என்ற பஸ் புதுக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு வழியாக புள்ளான்விடுதிக்கு காலை, மாலை என இருவேளை இயக்கப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் கடந்த ஒருமாத காலமாக சரிவர பஸ் இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் ஆலங்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.எனவே இப்பகுதிக்கு புதுக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு வழியாக தொடர்ந்து பஸ் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story