இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
விருதுநகரில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சோலைராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 21). இவர்களுக்கு 3 வருடங்களுக்கு முன் திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் விஜயலட்சுமி வீட்டு வேலைகளை சரியாக பார்க்காமலும், குழந்தையை சரியாக பராமரிக்காமலும் இருந்ததால் சோலைராஜ் மனைவியைக்கண்டித்துள்ளார்.
இதனைதொடர்ந்து விஜயலட்சுமியின் தாயார் காந்திமதி (48), வந்து தனது மகளிடம் குழந்தையை முறையாக பராமரிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து காந்திமதியை குழந்தையை தூக்கிக்கொண்டு மாரியம்மன் கோவிலுக்கு போக சொல்லி விட்டு வீட்டின் கதவை மூடிவிட்டு விஜயலட்சுமி தனது உடலில் மண் எண்ெணய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பலத்ததீக்காயங்களுடன் குற்றுயிராக கிடந்த விஜயலட்சுமி தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி காந்திமதி கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story