அல்லிகுண்டம் மலைப்பகுதியில் திடீர் தீ
உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
உசிலம்பட்டி,ஏப்.3
உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மலைப்பகுதி
உசிலம்பட்டி அருகே உள்ளது அல்லிகுண்டம். இந்த ஊரின் அருகில் உள்ள மலைப்பகுதியில் திடீரென்று தீப்பற்றியது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மலையில் இருந்த நாணல்புற்கள் காய்ந்து இருந்ததால் தீ மலை முழுவதும் பரவியது.
மேலும் மலையில் இருந்த அனைத்து மரங்களும் தீயில் எரிந்து நாசமாயின.
இந்த காட்டுத் தீயால் மலையில் வாழ்ந்த சிறு சிறு வன விலங்குகள் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.
புகார்
இது குறித்து அந்த கிராம மக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் இது தீயை அணைக்க அவர்கள் முன் விரவில்லை என்று கிராம மக்கள் புகார் கூறினர்.
Related Tags :
Next Story