புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
மதுரை,ஏப்
புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஜெப வழிபாடுகள் நடைபெற்றன. மதுரை ஞான ஒளிவுபுரம் புனித பிரிட்டோ பள்ளி வளாகத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து கீழவாசல் தூய மரியன்னை பேராலயம், புதூர் லுர்தன்னை ஆலயம், டவுன் ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயம், அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலயம், அண்ணா நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக நேற்று மாலையில் சிலுவை பாதை நிகழ்ச்சி அனைத்து ஆலயங்களிலும் நடந்தது. இதில் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தை இளைஞர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
Related Tags :
Next Story