டிரைவர் தற்கொலை


டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 3 April 2021 1:33 AM IST (Updated: 3 April 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள கஸ்தூரி ரெங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அர்ச்சுனன் மகன் முருகன் (வயது 32). பொக்லைன் எந்திர டிரைவர். இவர் நிதி நிறுவனம் மூலம் மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். பின்னர் தவணை தொகையை சரியாக கட்ட முடியவில்லை. 

இதனால் மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனத்தினர் எடுத்து சென்று விடுவார்களோ? என்ற மன வேதனை அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கி வருகின்றனர்.

Next Story