மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்சில் தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து 10 பவுன் நகை- பணம் கொள்ளை + "||" + Sprinkle anesthetic on couple on running bus 10 pound jewelery money robbery

ஓடும் பஸ்சில் தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து 10 பவுன் நகை- பணம் கொள்ளை

ஓடும் பஸ்சில் தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து 10 பவுன் நகை- பணம் கொள்ளை
ஓடும் பஸ்சில் தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து 10 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார்.
பாடாலூர்:

தனியார் பஸ்சில் பயணம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை அடுத்துள்ள நம்புக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருள்மொழி(வயது 55). இவர் தற்போது சென்னையில் உள்ள தி.நகரில் கணவருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து நம்புக்குறிச்சி கிராமத்திற்கு வருவதற்காக தனியார் பஸ்சில் அருள்மொழி கணவருடன் பயணம் செய்தார்.
நகை- பணம் கொள்ளை
அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த மர்ம நபர், தம்பதியின் மீது மயக்க மருந்து தெளித்ததாகவும், இதில் அவர்கள் மயங்கிய நிலையில், அவர்களின் பையில் இருந்த 10 பவுன் நகையையும், ரூ.5 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் மயக்கம் தெளிந்த தம்பதியினர், நகை மற்றும் பணம் ெகாள்ளையடிக்கப்பட்டிருந்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அருள்மொழி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தோகைமலை அருகே நாகம்மாள் கோவில் உண்டியலை உடைத்து பணம்
தோகைமலை அருகே நாகம்மாள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
ராமநத்தம் அருகே வீட்டு கதவை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. டாஸ்மாக்கடையில் துளைபோட்டு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை
கிருஷ்ணராயபுரம் அருகே டாஸ்மாக்கடையில் துளைபோட்டு ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. உளுந்தூர்பேட்டை அருகே கோவில் பூசாரி வீட்டில் 2 லட்சம் நகை பணம் கொள்ளை
உளுந்தூர்பேட்டை அருகே கோவில் பூசாரி வீட்டில் 2 லட்சம் நகை பணம் கொள்ளை
5. அரசு அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
அலங்காநல்லூர் அருகே அரசு அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போனது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்