மாவட்ட செய்திகள்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் + "||" + Elderly people with disabilities should be given priority in voting

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நுண் பார்வையாளர்களுக்கு, அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
ஊட்டி

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நுண் பார்வையாளர்களுக்கு, அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

பயிற்சி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் நுண் பார்வையாளர்களுக்கு, ஊட்டி கலெக்டர் அலுவலக அரங்கில் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் மற்றும் வாக்குப்பதிவை கண்காணிப்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் 868 வாக்குச்சாவடிகளில் 112 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளரின் பணி மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடுநிலையோடு பணியாற்ற வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முந்தைய நாளே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு சென்று, அந்த சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

வாக்குப்பதிவு நாளில் வேட்பாளரின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறதா, வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டு பூஜ்ஜியம் நிலையில் உள்ளதா, முகவர்களுக்கு அடையாள அட்டை உள்ளதா என்று கண்காணிக்க வேண்டும்.

முன்னுரிமை

வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டு வருகிறார்களா என்று சரிபார்க்க வேண்டும். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்கிறார்களா என்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அதற்குரிய ஆவணங்களை பொது பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்புடைய செய்திகள்

1. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டருகே தடுப்பூசி போட ஏற்பாடு ஐகோர்ட்டில், மத்திய அரசு உறுதி
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடுவது சாத்தியம் அற்றது என்றும், அவர்களுக்கு வீட்டருகே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என்றும் மும்பை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது.
2. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் மும்பை ஐகோர்ட்டு வேதனை
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என வேதனை தெரிவித்த மும்பை ஐகோர்ட்டு, இது தொடர்பாக 19-ந் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
3. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே ஓட்டுபோட்டனர்
கோவையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் வீடுகளில் இருந்தவாறே அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டுப்போட்டனர்.
4. முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
அரியலூர் மாவட்டத்தில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
5. 61 முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் 61 முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.