பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிரான அலை வீசுகிறது


பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிரான அலை வீசுகிறது
x
தினத்தந்தி 3 April 2021 4:20 PM GMT (Updated: 3 April 2021 4:20 PM GMT)

பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிரான அலை வீசுகிறது-தமிழக காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர் பேட்டி

தொண்டி
தமிழக காங்கிரஸ் தேர்தல் பார்வையாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பல்லம் ராஜு நேற்று திருவாடானை வருகை தந்தார். அவர் திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம், ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகள் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது, தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. மீது எதிர்ப்பு அலை கடுமையாக உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். பா.ஜ.க.வின் மக்கள் விரோத திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு துணை போனதால் அதன் மீதும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.

Next Story